மார்பக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்... இறப்பு வரை பலர் செல்ல என்ன காரணம்?
மார்பக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குணப்படுத்த முடியும் என்றாலும் பலரும் இறப்பு வரை செல்வது தொடர்கிறது.
இதற்கு காரணம், இந்தியாவில் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களில் 50 சதவீதம் மூன்றாம், நான்காம் கட்ட நிலையில் தான் கண்டறியப்படுகின்றன.
எனவே, இதை தவிர்க்க துவக்க நிலையில் பாதிப்பை கண்டறிய, 20 வயதிற்கு மேல் மார்பக சுய பரிசோதனை அவசியம்.
மேலும், 40 வயதிற்கு மேல் மேமோகிராம் பரிசோதனையும் செய்ய வேண்டும்.
திருமணமான பெண்கள் 2 ஆண்டுக்கு ஒரு முறை 'பேப்ஸ்மியர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
துவக்க நிலையில் அறிந்தால், 60 சதவீத புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தலாம்.