குழந்தைகளுக்கு பருவநிலை மாற்றங்களால் வரும் பிரச்னைகளுக்கு தீர்வுகள்!!

பருவநிலை மாற்றங்களால் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, தொண்டை வலி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

பருவநிலை மாற்றங்களால் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, தொண்டை வலி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

உடல் நீரேற்றமாக இருக்க குழந்தைகள் தினமும் குறைந்தது 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கலாம்.

எதிர்ப்பு சக்திக்கு எலுமிச்சை சாறு, தயிர், தர்பூசணி, தண்ணீர் போன்ற இயற்கை பானங்கள் சிறந்தவை. அவற்றை குளிர்சாதனப்பெட்டியில் அதிக நேரம் வைப்பது சளியை ஏற்படுத்தும்.

கைகளை அடிக்கடி சோப் பயன்படுத்தி கழுவுவது, சளி, தும்மல் உள்ள நபர்களின் அருகில் செல்லாமல் இருப்பது போன்ற தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

தினமும் 9 முதல் 11 மணி நேர சீரான தூக்கம், பழங்கள், காய்கறிகள், சிறிதளவு தயிர் போன்றவையும் வெப்பத்தை கட்டுப்படுத்தும்.

சுக்கு, திப்பிலி, துளசி போன்ற இயற்கை மூலிகை கசாயம் கொடுத்தால், சளி காய்ச்சல் வருவதை தடுக்கும்.

அடிக்கடி பாதிப்பு ஏற்படும் சூழலில் டாக்டரை அணுகுவது அவசியம்.