கொய்யா பழத்தை இரவில் சாப்பிடலாமா?

கொய்யா பழத்தில் வைட்டமின் பி மற்றும் சி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

கொய்யாப்பழத்தை நன்றாக கழுவிய பிறகு, பற்களால் கடித்து நன்றாக மென்று தின்பதே நல்லது; பற்களும், ஈறுகளும் பலப்படும்.

இதில் அதிகளவிலுள்ள வைட்டமின் சி குழந்தைகளின், உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் உதவும்.

கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது.

இது, முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது; தோல் வறட்சியை நீக்குகிறது; முதுமை தோற்றத்தை குறைத்து இளமையாக மாற்றுகிறது.

உணவு சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை உட்கொள்வது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிடலாம்.

இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும்.

இது குடல் இயக்கத்தை துரிதப்படுத்தி, அசவுகரியத்தை உண்டாக்கும் என்பதால், இரவில் சாப்பிடக்கூடாது.

வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.