தொடர் மழை, சீதோஷ்ண நிலை மாற்றத்தால் எவ்வித காய்ச்சல் பரவும்? தப்பிக்க டிப்ஸ்

தற்போதைய சூழலில் 60 வயதுக்கும் மேற்பட்டோர், 2 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

இவர்களுக்கு எளிதில் 'புளு காய்ச்சல்' பரவ வாய்ப்புண்டு. எனவே இதில் இருந்து தற்காத்து கொள்ள கூட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு செல்லக்கூடாது.

கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

தும்மல், இருமல் வரும் போது காற்றின் மூலம் 'கிருமி தொற்று' எளிதல் பிறருக்கு பரவும். 'புளு காய்ச்சல்' வருவதை தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி போடலாம்.

நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும்.

காய்ச்சலுடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால், பிற குழந்தைகளுக்கு பரவ வாய்ப்புள்ளதால், அதை தவிர்க்க வேண்டும்.

தொடர் காய்ச்சல் 'நிமோனியா'வாக மாறுவதற்கு கூட வாய்ப்பு ஏற்படும். எனவே காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.