உடலில் நச்சுக்கழிவுகள் தேங்கியிருப்பதற்கான அறிகுறிகள் இவை..!

அடிக்கடி தலைவலி ஏற்படுதல்... அடிக்கடி தலைவலி ஏற்படுவதற்கு, உடலில் நச்சுக்கழிவுகள் தேங்கியிருப்பது காரணமாக இருக்கலாம்.

குமட்டல்... உணவு எடுத்து கொள்ளும் போது, பிற நேரங்களில் குமட்டல் வந்தால், உடலில் நச்சுகளை நீக்க வேண்டியது அவசியம்.

வயிறு உப்புசம்... கழிவுகள் தேங்கும்பட்சத்தில் வயிறு வீங்கிய நிலையில், உப்புசமாக உணர்வீர்கள்.

சோர்வு... வழக்கமான உற்சாகம் இல்லாமல், சோர்வாக உணர்ந்தீர்கள் எனில் உடல் நச்சுக்கழிவுகள் சேர்ந்திருக்கலாம்.

குடைச்சல் & வலி... உடலில் பல்வேறு பகுதிகளில் வலியும், குடைச்சலும் இருப்பின் நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவது அவசியம்.

எரிச்சல் மனநிலை... அடிக்கடி எரிந்து விழும் மனநிலை, நச்சுக்கழிவுகள் தேக்கத்தால் ஏற்படலாம்.

மலச்சிக்கல்... மலம் கழிப்பதில் சிரமம் மற்றும் பசியின்மை போன்றவற்றை உணர்ந்தால், குடலில் கழிவுகளின் தேக்கம் உள்ளது என அர்த்தம்.

சரும பிரச்னைகள்... சருமத்தில் கழிவுகள் தேங்குவதால், தோலின் மேல்பகுதிகள் கொப்புளம், பருக்கள் ஏற்படலாம்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, நச்சுக்களை நீக்க கூடிய சரியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். பரபரப்பான வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்யவும், ஓய்வெடுக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும்.