சர்கோமா ஓர் அரியவகை புற்றுநோய்... அறிந்து கொள்வோம்!

புற்றுநோய்களில், 'சர்கோமா' என்பது ஒப்பீட்டளவில் அரிதான ஆனால் தீவிரமான ஒருவகை ஆகும்.

சர்கோமா என்பது எலும்புகள் அல்லது இணைப்புத் திசுக்களில் உருவாகும் ஒருவகை புற்றுநோய். மனித உடலில் உள்ள எலும்புகள், தசைகள், தசை நாண்கள், கொழுப்பு, நரம்புகளில் ஏற்படலாம்.

மொத்த புற்றுநோய்களில் எலும்பு சர்கோமா தோராயமாக 0.2% மட்டுமே என்றாலும், இந்தியாவின் இளைய தலைமுறையினரிடையே இதன் தாக்கம் மிக அதிகம்.

கட்டி அல்லது வீக்கம், எலும்பில் வலி, வயிற்று வலி, எதிர்பாராத எடை இழப்பு மற்றும் காய்ச்சல் ஆகியன முக்கிய அறிகுறிகள்.

மேலும் மூட்டுகளுக்கு அருகில் கட்டி உருவாகியிருந்தால், மூட்டுகளின் இயல்பான அசைவுகளில் சிரமம் ஏற்படலாம்.

இமேஜிங் சோதனைகள் (எக்ஸ்ரே, சி.டி; எம்.ஆர்.ஐ; PET ஸ்கேன்கள் ), மற்றும் பயாப்ஸி (கட்டி திசு மாதிரியை எடுத்து பரிசோதித்தல்) ஆகிய மருத்துவப் பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.

மருத்துவ அறிவியலின் முன்னேற்றங்கள் புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ளன.

உங்கள் உடலில் அசாதாரணமான எந்த மாற்றத்தையும் கண்டால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகவும்.