இன்று உலக மனநல தினம்

மனதளவில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்.10ல் உலக மனநல தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஒருவர் முழுமையான வேலை திறனை வெளிப்படுத்த அவர் உடலாலும், மனதாலும் முழு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

வேலைப்பளு சார்ந்த மன அழுத்தம் காரணமாக, மனச்சோர்வு, மனப்பதற்றம், அச்சம், எரிச்சல், கோபம், புலம்பல் ஏற்படுகிறது.

இதனால் எதிர்மறை எண்ணங்கள், அழுகை, ஆத்திரம், உடல் பருமன் அல்லது எடை குறைவு போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

இது, அவர்களின் உடல், மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அவர்களின் வேலைத்திறன், வேலை சார்ந்து முடிவு எடுக்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

மன ஆரோக்கியம் இல்லாமல், உடல் ஆரோக்கியம் சாத்தியமில்லை.

தினசரி உடற்பயிற்சி, தியானம், யோகா, சரியான நேரத்தில் சரிவிகித உணவை உட்கொள்ளுதல், சரியான துாக்கம் மிக மிக முக்கியம்.

'சேவைகளுக்கான அணுகல் - பேரழிவு, அவசர நிலையில் மனநலம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.