ஒரு நாளுக்கு எவ்வளவு நெய் சாப்பிடலாம்? ஆய்வுகள் கூறுவதென்ன?
பாரம்பரிய மருத்துவ முறைகளில் மருந்திலும் சரி, அன்றாட உணவிலும் சரி நெய் பிரதான பங்கை வகிக்கிறது.
கலாச்சார முக்கியத்துவம் நெய்யின் பயன்பாட்டிற்கு இருந்தாலும், சமீப ஆண்டுகளாக நெய் சாப்பிடுவது கொழுப்பை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இதை உறுதி செய்யும் விதமாக நடந்த ஆய்வுகளில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நெய்யில் இருப்பதாகவும், மிதமான அளவில் தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொள்வது நல்லது என்றும் கூறப்படுகிறது.
நெய்யில் உள்ள ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உயிரணு சவ்வுகளின் பலத்தை பராமரிக்கவும், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் அவசியம்.
ப்யூட்ரிக் அமிலம் போன்ற நெய்யின் கூறுகள் குடலில் நோயெதிர்ப்பு செல்களை உருவாக்கவும், நோயெதிர்ப்பு செயல்பாட்டை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
ஆயுர்வேதத்தில் நெய் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சாத்வீக உணவாக நெய் கருதப்படுகிறது. இது மனதையும் உடலையும் துாய்மை அடைய செய்து, அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சி உணர்வைத் தர உதவுகிறது.
வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் நெய்யில் உள்ளன. இருப்பினும், நெய்யில் இன்னும் நிறைவுற்ற கொழுப்பும் உள்ளது.
ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சம் மூன்ற டீஸ்பூன் வரை சாப்பிடலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.