50 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை அவசியமா?
இதயநோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவைகளால் மரணம் அதிகம் ஏற்படுகிறது.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்புச்சத்து ஆகிய அறிகுறி இல்லாத நோய்களே திடீர் மரணத்திற்கான அடிப்படை காரணமாகும்.
30 வயதிற்கு மேலுள்ள 17 சதவீதத்தினருக்கு நீரிழிவு பாதிப்பும், 24 சதவீதத்தினருக்கு ரத்த அழுத்தமும் உள்ளது.
இது போன்ற அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்காக தொற்றா நோய் பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
அனைத்து பரிசோதனைகளையும் முழுமையாக செய்து முன்கூட்டியே பிரச்னைகளை கண்டுபிடித்தால் திடீர் மரணத்தை தவிர்க்கலாம்.
முழு உடல் பரிசோதனை 50 வயதுக்குமேல் என்பது இல்லை, 30 வயதிற்கு மேல் கண்டிப்பாக செய்ய வேண்டும்; நமக்கு தெரியாமல் அறிகுறி இல்லாத நோயையும் கண்டுபிடிக்கலாம்.
சமீபகாலமாக பலரும் கேன்சர் இருப்பது முன்கூட்டியே தெரியாமல் கடைசி கட்டத்தில் கண்டுபிடித்து சிகிச்சை பெற முடியாமல் தவிப்பதால், ஒவ்வொருவருக்கும் முழு உடல் பரிசோதனை அவசியம்.