சிறப்பு குழந்தைகளுக்கான செயல்முறை மருத்துவம்!

செயல்முறை மருத்துவம் என்பது மருந்து, ஊசி இல்லாமல், மன மற்றும் உடல் வளர்ச்சி குறைபாடுகளைச் சரிசெய்து, அன்றாட வாழ்க்கையை இயல்பாக்க உதவும் சிகிச்சை முறை ஆகும்.

பிசியோதெரபி போன்ற பயிற்சிகள் மூலம் உடல் இயக்கத்தையும், வளர்ச்சி குறைபாடுகளை சரிசெய்யும் சிறப்புப் பயிற்சிகளையும் கொண்டது.

வாழ்க்கை முறை மாற்றம், உறவுகள் இல்லாமல் வளர்வது போன்ற பல காரணங்களால், 10 குழந்தைகளில் ஒன்று ஆட்டிசம் அறிகுறிகளுடன் பிறக்கிறது.

மூன்று வயதிற்குள் இதை அடையாளம் கண்டு எங்களிடம் அழைத்து வந்தால், செயல்முறை மருத்துவத்தின் உதவியுடன், மற்றவர்களை சார்ந்து இல்லாமல் வாழ பயிற்சி தர முடியும்.

மன, உடல் வளர்ச்சியில் உள்ள குறைபாடுகளை சரி செய்து, தினசரி வாழ்க்கையை யாருடைய உதவியும் இன்றி இயல்பாக நடத்த உதவி செய்வதே, செய்முறை மருத்துவத்தின் நோக்கம்.

ஞாபக மறதி இருக்கிறது, ஆட்டிசம், டிஸ்லெக்சியா என்ற கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகள் என்று அனைவருக்கும் செயல்முறை மருத்துவம் அவசியம்.

பக்கவாத பாதிப்பால் செயலிழந்த உறுப்புகளை செயல் பாட்டுக்கு கொண்டு வருவதிலும் செயல்முறை மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது.