கோடையில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
உடல் எடை சராசரியாக 60 - 65 கிலோ இருப்பவர்களுக்கு, சிறுநீரகச் செயல்பாடு இயல்பாக இருந்தால், 24 மணி நேரத்தில் 1,200 - 1,500 மில்லி சிறுநீர் வெளியேறும்.
இது கோடைக்காலம் என்பதால், வெளியேறும் சிறுநீர் அளவு குறையலாம். 1,500 மில்லி சிறுநீர் வெளியேற 2,500 - 3,000 மில்லி திரவம் குடிக்க வேண்டும்.
நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணி, வெள்ளரி போன்ற பழங்கள், காய்கறிகள், மோர், இளநீர், நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறுநீர் தவிர, வியர்வை வழியாகவும், சுவாசக் காற்றிலும் 500 - 750 மில்லி வரை நீர் வெளியேறலாம்.
மேலும், 24 மணி நேரத்தில் 2,500 மில்லி அளவு திரவ ஆகாரம் எடுத்துக் கொண்டால், வெளியேறும் சிறுநீர் அளவு 1,200 மில்லி இருக்கும்.
இதய நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளவர்கள் திரவ ஆகாரம் குறைவாக குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.