முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கும் 5 ஊட்டச்சத்துகள்
வைட்டமின்கள்... கீரை, முட்டைக்கோஸ், துளசி மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றில் நரைமுடியை தள்ளிப்போடுவதற்கான வைட்டமின்கள் உள்ளன.
தாமிரம்... இறைச்சிகள், கடல் உணவுகள் மற்றும் எள் போன்ற தாமிரம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.
புரதம்... கூந்தலில் கெரட்டின் என்ற புரதம் உள்ளது. போதிய புரதத்தை உட்கொள்ளாவிட்டால், பலவீனமாக மாறும்; முன்கூட்டியே நரைக்கத் துவங்கும். எனவே, முட்டை, இறைச்சி, பருப்பு வகைகளை உட்கொள்ளுங்கள்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள்... நட்ஸ்கள், ஓட்ஸ், பூசணி, சூரியகாந்தி மற்றும் தர்பூசணி விதைகள், எள் போன்ற பல உணவுப் பொருட்கள் ஆன்டிஆக்சிடென்ட் கொண்டவை; உச்சந்தலையின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்... இது கூந்தலின் வேர்க்கால்களை பாதுகாக்கும். சால்மன் மற்றும் டுனா மீன், அக்ரூட் பருப்பு, ஆளி விதை, சியா விதை ஆகியவற்றில் இச்சத்து உள்ளது.
இந்த 5 ஊட்டச்சத்துக்களும் நரைமுடியை தாமதாக்குவது மட்டுமின்றி, கூந்தலின் அடர்த்தியையும் அதிகரிக்கக்கூடும்.