சூரியகாந்தி விதைகளை தினமும் சாப்பிடுவதற்கான 6 காரணங்கள்

இதிலுள்ள மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை எலும்புகளை வலுப்படுத்துகிறது; ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பை தவிர்க்க உதவுகிறது.

வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிகல்களை எதிர்த்து, சருமத்தை பளபளப்பாக்குகிறது.

இதிலுள்ள வைட்டமின் ஈ, மெக்னீசியம், செலினியம் போன்ற ஊட்டச்சத்துகள் உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், பசி உணர்வை கட்டுப்படுத்துவதன் மூலம், உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் கெட்ட கொழுப்பை குறைப்பதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதிலுள்ள டிரிப்டோபான், செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய அமினோ அமிலம். இது மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கிறது.