60 பிளஸ் சுலபமாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் சில...

எலும்புகளைப் பலப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் 60 வயதைத் தாண்டியவர்களுக்கு, உடற்பயிற்சியின் மிகவும் அவசியம் . தினமும் 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லாமல் நீட்டிக்கும் வகையிலான சிம்பிள் உடற்பயிற்சிகள் செய்யலாம்.

டோ லிப்ட்ஸ் - நாற்காலியைப் பிடித்தபடி நின்றுகொண்டே லேசாகக் கெண்டைக் காலை உயர்த்த வேண்டும். உடலைப் பிடிமானமின்றி பேலன்ஸ் செய்ய இந்தப் பயிற்சி உதவும்.

பேக் லெக் ரெய்சஸ் - இடுப்பின் கீழ்ப்பகுதி, முதுகின் பின்பகுதி வலுவடைய உதவும் பயிற்சி இது. நாற்காலியை பிடித்து கொண்டு ஒவ்வொரு காலையும் புன்புறமாக உயர்த்தவும்.

சைடு லெக் ரெய்ஸ்: இந்த பயிற்சியின் போது நாற்காலியை பிடித்துக்கொண்டு காலை பக்கவாட்டில் மெதுவாக உயர்த்த வேண்டும். இது உங்களின் பேலன்ஸுக்கான பயிற்சியாகும்.

ஸ்டாண்டிங் லெக் லிஃப்ட் - இடதுகாலை உயர்த்தும்போது இடது கையையும், வலதுகாலை உயர்த்தும்போது வலது கையையும் பின்புறம் கொண்டு செல்ல வேண்டும். இப்படியே சில நிமிடங்களுக்கு மெதுவாகச் செய்யலாம்.

ஷோல்டர்ஸ் ரோல் - தோள்பட்டையை மேலே உயர்த்தி பின்னர் மெதுவாக முன்புறம் சாய்க்க வேண்டும். பின்பு கீழிறக்கியவாறே பின்னோக்கிக் கொண்டுவந்து இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்.

கால்ப் ஸ்டெர்ச்- சுவரின் அருகில் நேராக நின்று கொண்டு, ஒரு காலை நன்றாகத் தரையில் ஊன்றிக் கொண்டு இன்னொரு காலைப் படத்தில் காட்டி உள்ளபடி சுவற்றில் வைக்கவும். தினமும் 20 முறை இது போன்ற அசைவுகளை செய்யவும்.