மூட்டுகளுக்கு வலு சேர்க்கும் எண்ணெய்!
உடம்பின் மொத்த எடையையும் தாங்கும் மூட்டுகளை, பிரச்னை வரும் வரை கவனிக்காமல் இருப்பது தான் ஜாயின்ட் அபியூஸ்.
பழங்காலத்தில் குழந்தை பருவத்தில் இருந்தே எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருந்தது. 1990ம் ஆண்டுகளில் பிறந்தவர்கள் வரை இதை கடைப்பிடித்தனர்.
ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக, தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதை சிலர் மட்டுமே செய்கின்றனர் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடல் முழுதும், குறிப்பாக கால் முட்டி, கணுக்கால், தோள் பட்டை, இடுப்பு உட்பட எல்லா மூட்டுகளிலும், வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெயை லேசாக சூடுபடுத்தி, தேய்த்து குளிக்க வேண்டும்.
அதிக உடல் உழைப்பு இல்லாவிட்டாலும், மூட்டு களை ஆரோக்கியமாக பராமரிக்க இது உதவும்.
செரிமானக் கோளாறுகள், காய்ச்சல், மார்பு சளி, தொற்று பாதிப்பு இருந்தால், எண்ணெய் தேய்த்து குளிப்பது கூடாது. இவை குணமான பின் செய்யலாம்.
மாலையில் உடற்பயிற்சி செய்பவர்கள், அன்று காலை எல்லா மூட்டுகளிலும் எண்ணெய் தேய்த்து, அதிக பட்சம் அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம். இது மூட்டுகளுக்கு தேவையான பலத்தை தரும்.