மெனோபாஸ் காலத்தை லேடீஸ் பத்திரமாக பாஸ் செய்வது எப்படி?
பெண்களுக்கு பொதுவாக, 50 - 55 வயதில் ஏற்படக்கூடிய மாதவிடாய் சுழற்சி நிறுத்தம் (மெனோபாஸ்) தற்போது, 40 வயதிலே ஏற்படுகிறது. இதை, 'ப்ரீமெச்சூர் மெனோபாஸ்' என்பர்.
ஊட்டச்சத்து குறைபாடு, அதீத மன அழுத்தம், புகைப்பிடிக்கும் பழக்கம், புற்றுநோய் சிகிச்சை எடுத்தல் போன்ற பல காரணங்களால் இம்மாற்றம் நிகழ்கிறது.
இச்சமயத்தில், மாதவிடாய் சுழற்சிக்கு காரணமான, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மிகக்குறைவாக சுரப்பதால், மாதவிடாய் நிற்கக்கூடும்.
மேலும், எலும்புகளை வலுவாக்குவதில், ஈஸ்ட்ரோஜன், புரோஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை சுரப்பது குறைந்தால், எலும்புகள் வலுவிழந்து விடும்.
இதனால், கீழே விழுந்தால் உடனே எலும்பு முறிவது, கை மணிகட்டு, இடுப்பு எலும்புகளில் விரிசல் ஏற்படலாம்.
இக்காலக்கட்டத்தில் பெண்களுக்கு, உளவியல் ரீதியாக மன அழுத்தம், கோபம், அதிகமாக வியர்ப்பது போன்றவை ஏற்படலாம்.
எலும்புகளை வலுவாக்க, பால், பால் சார்ந்த பொருட்கள், காய்கறி, கீரைகள், பழங்கள் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது அவசியம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.