வெயிலில் மயங்கி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?
வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெளியே சென்றால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, நீரிழப்பு ஏற்பட்டு, 'ஹீட் ஸ்ட்ரோக்' எனும் வெப்பவாதம் ஏற்படலாம்.
அதிக வெயிலால் தலைசுற்றல், தலைவலி, மயக்கம், வலிப்பு ஏற்பட்டு, கோமாவிற்கு செல்ல வாய்ப்புண்டு.
உடலின் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் மேல் இருந்தால், ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படலாம்.
இந்நிலையில் யாரேனும் மயங்கி விழுந்தால் உடனே, நிழல் பகுதிக்கு கொண்டு வந்து, ஐஸ் கட்டியை அக்குள் பகுதியில் வைக்கலாம்.
தண்ணீரை முகத்தில் தெளிப்பதுடன், காற்றோட்டமான சூழலை ஏற்படுத்த வேண்டும். உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்வதும் அவசியம்.
இச்சமயத்தில் குடிக்க தண்ணீர் கொடுக்க கூடாது. அது நுரையீரலுக்கு சென்று, மூச்சு திணறல் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டவருக்கு, இதயம், மூளை, சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் குறைந்தாலும், அதிகரித்தாலும் மயக்கம் ஏற்படும்.
எவ்வித பாதிப்புக்கும், முறையான மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.
காலை 11:00- மாலை 4:00 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே செல்வதாக இருந்தால், தண்ணீர் பாட்டில், குடை அவசியம்.