மகிழ்ச்சியாக தேர்வை எதிர்கொள்ள சில டிப்ஸ்...
நீங்கள் தேர்வுக்காக படிக்க துவங்கும் முன் என்ன படிக்க வேண்டும், எதையெல்லாம் ரிவைஸ் செய்ய வேண்டும் என்பதை ஒரு அட்டவணையாக போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு பாடத்தையும் முன்னுரிமை படி வரிசைப்படுத்துங்கள். படித்த பாடங்கள் மற்றும் தலைப்புகளின் பெயரைப் பட்டியலிடுங்கள்
படிக்கும் போது மனப்பாடம் செய்தல், ஹின்ட்ஸ் எழுதிவைத்தல், நினைவுபடுத்திப் பார்த்தல், ஒரு நல்ல உத்தியாகும்.
ஒரு நாளைக்கு படிக்கும் நேரத்தை முடிவு செய்யும் போது, இடைவேளைகளை கூடவே திட்டமிடவும். இடைவேளையின் போது வாக்கிங், டிவி பார்த்தல், பாட்டு கேட்பது போன்றவற்றை செய்யலாம்.
அளவுக்கு அதிகமாகப் படித்துத் திணித்துக்கொள்வதைவிட படித்ததை ஒருங்கிணைத்து எவ்வளவு அழகாக எழுதுகிறோம் என்பது நல்ல மதிப்பெண்களுக்கு உதவும்.
மதிப்பெண்ணை மட்டும் குறிக்கோளாக வைத்து கொள்ளாமல், பாடத்தை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம் என கணக்கில் வைத்து கொள்ள வேண்டும்.
பெற்றோரின் எதிர்பார்ப்பை பற்றி எண்ணாமல் உங்களின் தடைகள், பிரச்னைகளை பற்றி அவர்களுடன் கலந்துரையாடவும்.
மதிப்பெண்ணை விட வாழ்க்கை மிக முக்கியம் என்பதை மனதில் ஏற்றி கொள்ளுங்கள். தோல்வியை கண்டு அஞ்சக்கூடாது.