மதியம் குட்டித் தூக்கம் போடலாமா?

பெரும்பாலான மக்கள் பகலில் குட்டித் தூக்கம் போடலாம். அவர்கள் ஆரோக்கியமான இரவு தூக்கத்தையும் அனுபவிக்க முடியும்.

ஆனால் இன்சோம்னியா (தூக்கமின்மை) பிரச்னை உள்ளவர்கள் பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் பகலில் தூங்கினால் அது இரவு தூக்கத்தை கெடுக்க வழிவகுக்கும்.

மதிய நேரத்தின் ஆரம்பத்திலேயே தூங்குவது நல்லது. தாமதமாக குட்டித் தூக்கம் போடுவது, நீண்ட நேர பகல் தூக்கம் போட்டதை போன்று இரவெல்லாம் கண் விழிக்க வைக்கும்.

மதியம் 1 முதல் 3 மணி வரையில் மந்தமாக உணரக்கூடும். இந்தக் நேரத்திற்குள் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தால் அது இரவு தூக்கத்தை பாதிக்காது.

குட்டித் தூக்கம் என்ற பெயருக்கு ஏற்றது போல் மதிய நேர தூக்கம் 20 முதல் 30 நிமிடங்களுக்குள் தான் இருக்க வேண்டும்.

ஒரு மணி நேரம் அதற்கு மேல் எல்லாம் நீளக்கூடாது. அப்படி நிகழ்ந்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்திருப்போம். அது இன்னும் சோர்வாக உணர வைக்கும்.

எழுந்தவுடன் செல்போனை ஒதுக்கிவைத்து விட்டு ஐந்து நிமிடங்கள் தியானம் செய்யுங்கள், கைகளையும் கால்களையும் நீட்டி மடக்குங்கள், சிறிது நேரம் நடக்கலாம்.

பின் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். அதன் பின்னர் வேலையை கவனியுங்கள்.