கடுக்காயின் ஆரோக்கிய நன்மைகள் !
சித்த மருத்துவத்தில் மருந்துப் பொருட்களில் ஒன்றாக கடுக்காய் உள்ளது.
இதை வாயில் அடக்கினால் இருமல் குணமாகும். இதன் பொடியை பாலுடன் கலந்து சாப்பிடலாம்.
உடல் எடையை குறைக்க உதவும்; செரிமானத்தை எளிதாக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண், இரைப்பை புண்ணை குணமாக்கும்; பசியை துாண்டும்.
இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கும். இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.
மலச்சிக்கலை போக்கும்; மூல நோயை தடுக்கும். கூந்தல் உதிர்வதை கட்டுப்படுத்துகிறது.
கடுக்காயில் உள்ள துவர்ப்புச் சுவை, வாய், தொண்டையில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.
தினமும் சிறிதளவு கடுக்காய் பொடி சாப்பிட்டால், உடலுக்கு நன்மை ஏராளம் கிடைக்கும்.