பல் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏன் வருகிறது?
ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு ஆரோக்கியமற்ற அல்லது நோயுற்ற ஈறுகளுக்கான அறிகுறி.
பொதுவாக பல் துலக்கும் போதோ அல்லது பல் இடுக்கை சுத்தம் செய்யும் போதோ ரத்தகசிவு ஏற்படலாம்.
ஈறுகள் வீக்கம் கடுமையாகும் போதும் அது கீழ் தாடை எலும்புகள் வரை செல்லும்போது ரத்தக் கசிவு அதிகமாகும்.
ஈறுகள் மற்றும் பற்கள் சந்திக்கும் இடங்களில் பிளேக் உருவாவதால் நோய்தொற்று ஏற்படுதல் ஒரு காரணமாகும்.
பிரசவ காலத்தின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கூட ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம்.
வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே குறைபாடு, நீரிழிவு நோயாலும் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம்.
ஆகையால் ரத்தக் கசிவு அடிக்கடி ஏற்பட்டால் முதலில் பல் டாக்டரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். பின் அதற்கேற்ற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.