வலிப்பு நோயின் அறிகுறிகள் என்னென்ன?

ஒரு நபருக்கு வலிப்பு வருவதற்கு முன் சில அறிகுறிகள் தோன்றும். அதை ஆரா என்பர்.

வயிற்றிலிருந்து ஏதோ ஒன்று மேல் நோக்கி வருவது போல் வாமிட்டிங் உணர்வு இருக்கலாம்.

நெஞ்சில் திடீரென இதயத்துடிப்பு அதிகமாகவும், படபடப்பாகவும் இருக்கும். தொண்டையில் அடைப்பு இருப்பது போல் உணர்வும் இருக்கும்.

கண்ணில் வித்தியாசமான காட்சிகள், காதில் சத்தம் கேட்கும். ஒரு சிலருக்கு யாராவது பேசுவது போல் இருக்கும்.

இதுபோன்ற அறிகுறிகள் முதலில் தோன்றும். அதன் பின் அவர்களது நினைவு இழக்கும். வாயை சிலர் சவைப்பார்கள்.

இந்த அறிகுறிகள் மூலம் வலிப்பு ஏற்படப்போகிறது என்பதை உணர்ந்து அருகில் உள்ளவர்கள் முதலுதவி செய்யலாம்.