வெயில் காலத்திலும் பொடுகு தொல்லையா?

கோடைக்காலத்தில் அதிக வியர்வை, பூஞ்சைத்தொற்று காரணமாக பொடுகுத்தொல்லை ஏற்படும்.

குறிப்பாக தலையில் அதிக வியர்வை ஏற்படும் நபர்கள் பொடுகு பிரச்னையிலிருந்து விடுபட, அடிக்கடி தலைக்குக் குளியுங்கள் .

வெந்நீர் கூந்தல் வறட்சியை அதிகப்படுத்தும். அதனால் அதில் தலைக்குக் குளிப்பதை தவிர்க்கவும்.

பொதுவாக எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊறிய பிறகு குளிப்பது பொடுகை போக்குவதுடன் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்தும்

ஆயில் மசாஜ் செய்ய விளக்கெண்ணெயும், ஆலிவ் எண்ணெயும் ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் கலந்து, சூடு செய்து, மசாஜ் செய்யலாம். நல்ல பலன் தரும்.

சிறிது வேப்பிலையுடன், 3 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து, தலையில் ஊற வைத்து, 10 நிமிடங்கள் கழித்து, தலைக்கு குளித்தால், பொடுகினால் ஏற்படும் அரிப்பு நிற்பதுடன், முடி மென்மையாக இருக்கும்.

சாதாரண ஷாம்பூ பயன்படுத்தாமல் மாய்ஸ்ச்சரைசர் அதிகமுள்ள ஷாம்பூ உபயோகிக்கவும். அது கூந்தலை வறண்டு போகாமல் பாதுக்காக்கும்.

கற்றாழை யை எடுத்து, கூந்தலில் மசாஜ் செய்தால், குளிர்ச்சியாக இருக்கும். வாரம் ஒரு முறை செய்வதால் பொடுகு தொல்லை நீங்கும்.