இளநரைக்கு மருதாணி பயன்படுத்தினால் சரும பாதிப்பு ஏற்படுமா?

கெமிக்கல் கலந்த ஹேர் டை ஆபத்தை உண்டாக்கலாம்; ஹென்னா இயற்கையானது என்பதால் பாதுகாப்பானது என்பது பலரின் கணிப்பாகும்.

ஒருசிலர் மருதாணியுடன் அவுரியையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். இவை இயற்கையான பொருட்கள் என்றாலும் பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது.

மூலிகைகளின் ஒன்றான அவுரி கருநீல நிறத்தை தரக்கூடும். ஹென்னா என்ற மருதாணியை கூந்தலில் தடவும்போது, அது முடிக்கு ஆரஞ்சு நிறத்தை தரக்கூடும்.

மருதாணியை தொடர்ந்து அவுரியைப் பூசும்போது, அதன் கருநீல நிறம் சேர்ந்து கருமை நிறம் கிடைக்கக்கூடும்.

அவுரியின் அடர் நிறமானது சிலருக்கு சருமத்தில் இறங்கவும் வாய்ப்புள்ளது. தலை வழியே சருமத்தில் இறங்கும் நிறமானது, சருமத்தைக் கறுப்பாக்கிவிடும். அது சரியாக பல நாட்களாகும்.

எனவே, அவுரியை முடிந்தளவு தவிர்க்கலாம் அல்லது குறைந்தளவு பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே பயன்படுத்தியதால் ஏற்பட்ட சரும கருமையைப் போக்க பால் தடவி வர வேண்டும்.

முல்தானி மட்டியுடன் சிறிது பன்னீர் மற்றும் கிளிசரின் கலந்து கருமை படர்ந்த இடத்தில் பேக் ஆக போடலாம். வாரம் இருமுறை செய்தால் இதை போதுமானது.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதும் அவசியமானது. இதனால், படிப்படியாக கருமை மறையக்கூடும்.