கோடையில் அசைவம் ஆகாது... டாக்டர்கள் எச்சரிக்கை !

கோடையில் நீர்சத்து குறைபாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, பழங்கள், காய்கறிகள், இளநீர், மோர் உள்ளிட்ட நீர்சத்துள்ள பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

அதிக காரம், எண்ணெய் நிறைந்த அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

ஹோட்டல் மற்றும் தெருவோர கடைகளில் அசைவ உணவுகளை தவிர்ப்பது கோடை காலத்தில் நன்மை தரும். தேவைப்பட்டால் வீட்டில் சமைத்து சாப்பிடலாம்.

அதிக அசைவ உணவுகளை சாப்பிடும்போது உடலில் நீர்சத்து குறைபாடு இருந்தால் வயிற்றுப்போக்கு போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.

நீர்சத்து குறையும் பலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டு பக்கவாத பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எனவே அதிக தண்ணீர், மோர், இளநீர் போன்றவற்றை அவ்வப்போது குடித்து, உடலில் போதிய அளவு நீர்சத்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸாக உள்ளது.