சிசேரியன் செய்ய என்ன காரணம்?
கர்ப்பம் உறுதி ஆனதில் துவங்கி, கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கரு வளர்ச்சியில் குறைபாடு போன்ற, 'ஹை ரிஸ்க்' எனப்படுகிறது.
இது போன்ற சூழ்நிலையில், நார்மல் டெலிவரிக்கு தரப்படும் காலக்கெடுவை டாக்டர்கள் குறைப்பதுண்டு.
மேலும் பிரசவத்தின் போது எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை கழிக்கும் மெக்கோனியம் (முதல் மலம்) திரவத்துடன் இருந்து, குழந்தையின் இதயத் துடிப்பும் சீராக இருந்தால், அடுத்த 2 - 3 மணி நேரத்தில் பிரசவம் ஆகிவிடும்.
குழந்தை அடர்த்தியாக மலம் கழித்து, கர்ப்பப்பையின் வாய் 10 செ.மீ., திறந்து, பிரசவம் ஆவதற்கு ஐந்தாறு மணி நேரம் ஆகலாம் என்ற சூழ்நிலையில், மலத்தை விழுங்க வாய்ப்புகள் அதிகம்.
இது, நுரையீரலுக்குள் சென்று தீவிர தொற்று ஏற்படும். இப்படியான சூழ்நிலையில் தான் பெரும்பாலும் சிசேரியன் செய்யப்படுகிறது.
மேலும் அம்மா, குழந்தை இருவரின் நலனை கருத்தில் கொண்டு சிசேரியனா, நார்மல் டெலிவரியா என்று மகப்பேறு டாக்டர் முடிவெடுப்பர்.