காலில் வீக்கம், மூச்சுத் திணறல், அடிக்கடி படபடப்பு ஏற்பட என்ன காரணம்?

உடலில் இரும்புச் சத்து குறைந்து ரத்த சோகை ஏற்பட்டால் இது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

மாதவிடாய் பிரச்னைகள் இருப்பவர்கள், வயிற்றில் பூச்சி இருக்கும் குழந்தைகளுக்கு இது போன்ற இரும்பு சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும்.

உடல் வெளிறுதல், அடிக்கடி படபடப்பு, சோர்வு, மூச்சுத் திணறல் இருந்தால் சிகிச்சை பெற வேண்டும்.

குடல், இரைப்பை பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டாலும் ரத்த சோகை ஏற்படும்.

இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் புற்று நோய், காசநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இரும்புச்சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஏற்பட்டவர்கள் உணவில் கீரை வகைகள், ஆட்டு ஈரல், பீன்ஸ், வெண்டை, வெல்லம், நாட்டு சர்க்கரை போன்றவைகளை சேர்த்து வர, உடலில் சத்து அதிகரிக்கும்.