சம்மரில் பருக்களை சமாளிக்க ஈஸி டிப்ஸ்...

உங்கள் சருமம் ஈரப்பதமாக இருக்க வேண்டும். அதனால் மாய்சுரைசர் பயன்படுத்துவதை கோடையில் தவிர்க்க வேண்டாம்.

சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகள் மற்றூம் நச்சுகள் நீக்குவது சருமத்தை முகப்பரு வராமல் தடுக்க செய்யும். அதனால் க்ளென்சரை பயன்படுத்துங்கள்.

மேலும் முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது நீரில் முகத்தைக் கழுவி, சுத்தப்படுத்த வேண்டும்.

வேப்ப இலைகள் இரண்டு கொத்து எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை கொண்டு முகம் கழுவி வந்தால் முகப்பருவை தடுக்கலாம்.

சந்தனத்தூளைப் பன்னீரில் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.

காற்றாழையில் உள்ள சதை பகுதியை எடுத்து, நீரில் நன்றாக அலசியபின், கூழாக்கி முகத்தில் தடவிவர, பருக்கள் குறையும்.

கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளை நிறையச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய், கேக், ஐஸ்கிரீம், சாக்லேட், பாலாடை போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.