நரம்பு பிடித்துக் கொள்கிறதா? இதோ டிப்ஸ்!!

நம்மில் பலருக்கு நீர்நிலைகளில் இறங்கும் போது, இரவில் தூங்கும் போது, நடக்கும் போது, காலை நீட்டும் போது என திடீரென கால் தசைகள் மற்றும் நரம்புகள் இழுத்து பிடித்துக் கொள்ளும்.

இதை ஆங்கிலத்தில் கிராம்ப்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இப்படி நரம்புகள் இழுத்து பிடிக்கும் போது அதிக வலி ஏற்படும்.

கை மற்றும் கால்களில் இதுபோன்று நரம்பு இழுக்கும் பிரச்னைகளுக்கு 'கால்சியம் குறைபாடு' தான் முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கால்சியத்தின் அளவு குறையும் போதும், குளிர்ச்சியான சூழலின் போதும் தசைகள் இழுத்துப்பிடிக்கின்றன.

இந்த பிரச்னையை சரிசெய்ய கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம், தூங்கும் முன் ஒரு கிளாஸ் பால் குடிக்கலாம் .

குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்ட உடலமைப்பை கொண்டவர்கள் கம்பளி ஆடைகளை தினமும் அணிந்து கொள்ளலாம்.

மேலும் நரம்பு பிடித்த இடத்தில் வெந்நீர் கொண்டு ஒத்தடம் கொண்டுக்க வேண்டும். பின் மெதுவாக நீவி விடலாம் நல்ல நிவாரணம் கிடைக்கும்.