இதய செயலிழப்பு என்பது என்ன? சிகிச்சை முறை என்னென்ன!!
இதயத்தில் ஓட்டை இருந்தால் முறையான சிகிச்சை செய்து சரி செய்ய வேண்டும். சீரற்ற இதயத் துடிப்பை சரி செய்ய 'பேஸ் மேக்கர்' பொருத்தலாம்.
கோளாறுக்கு தகுந்த சிகிச்சை செய்யாவிட்டால், இதய செயலிழப்பை தவிர்க்க முடியாது. இதய செயலிழப்பு என்ன சிகிச்சை முறை இருக்கிறது என அறிவோம்.
ரத்தத்தை உடல் முழுதும் 'பம்ப்' செய்யும் இதயத்தின் திறன் 68 - 70 சதவீதம் இருக்க வேண்டும்.
இது, 15 சதவீதத்திற்கும் கீழே சென்றால், இதயம் செயலிழந்து விட்டது என்று பொருள். உடலின் ஒவ்வொரு பகுதியிலும் நீர் சேர ஆரம்பிக்கும்.
இந்த மாதிரி நோயாளிக்கு இரண்டு விதமான சிகிச்சைகள் உள்ளன. ஒன்று, அறிகுறிகள் ஏற்பட்டவுடன், அதிகப்படியாக சேர்ந்த திரவம் வெளியேற மாத்திரை, இதய செயல்பாட்டை அதிகரிக்க மருந்துகள் கொடுத்து சரி செய்யலாம்.
இதில் முன்னேற்றம் கிடைக்காத சூழலில், உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க, இதயத்தின் பணியை வெளியில் இருந்து செய்யும் 'எக்மோ' கருவியை தற்காலிக தீர்வாகப் பொருத்த வேண்டும்.
அடுத்தகட்டமாக 'விஏடி' எனப்படும் 'வென்ட்ரிகுலார் அசிஸ்டிங் டிவைஸ்' என்ற கருவியை, 'திறந்த நிலை' அறுவை சிகிச்சை செய்து, இதயத்தின் அருகில் பொருத்தப்படும்.
இதய செயலிழப்பிற்கு நிரந்தர தீர்வு, இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே. நோயாளியின் வயது, உயரம், உடல் எடைக்கு தகுந்த மூளைச் சாவு அடைந்தவரின் இதயம் தானமாகக் கிடைத்தால் பொருத்தலாம்.