பொடுகு தொல்லையா? நச்சுனு சில டிப்ஸ...
தலையில் பொடுகு வருவது இயல்பு என்றாலும், அதை தடுக்காவிட்டால் முடி கொட்டுதல், உடைதல், சோரியாசிஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.
சீயக்காய், பாசிப் பருப்பு போன்றவற்றை தலையில் தேய்க்கும் போது, தோலின் மேல் பரப்பில் இருக்கும் துவாரங்களை அடைத்து விடுகிறது. இதனாலும் பொடுகு வரலாம்.
பொடுகு மட்டுமில்லாமல் ஈரம் அப்படியே தங்கி, பூஞ்சைத் தொற்று வரலாம். அதனால் தலையில் சீயக்காய் முழுவதும் நீங்கும் அளவிற்கு குளிக்க வேண்டும்.
ஷாம்புகளை பயன்படுத்தினால், சல்பேட் இல்லாத ஷாம்புகளை தேர்வு செய்ய வேண்டும்.
தேங்காய் எண்ணெய் உடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு தேய்த்து அலசினால் பொடுகு தொல்லை நீங்கும்.
தயிரை தலையில் தேய்த்து சுமார் 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஷாம்பு தேய்த்து குளித்தால், வெப்பம் குறைவதோடு, முடி பளபளப்பாகும். பொடுகு தொல்லையும் மறையும்.
சின்ன வெங்காயத்தை பேஸ்ட் போல் அரைத்து தலையில் தடவி சுமார் 30நிமிடங்கள் கழித்து குளித்தால், தலையில் உள்ள அழுக்கு, பொடுகு நீங்கும்.
மிளகுத் தூளுடன் பால் சேர்த்துத் தலையில் தேய்த்துச் சில நிமிடங்கள் ஊறிய பின் குளிக்க வேண்டும். பொடுகு தொல்லை நீங்கும்.