வலிப்பு நோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்
மூளையில் ஏற்படும் நரம்பு கோளாறினால், சில அசாதாரண மின்னழுத்த செயல்பாடுகள் ஏற்படுகின்றன; இதுவே வலிப்பு.
வலிப்பு நோயால் 70 - 80 % பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். எந்த வகை என்பதை துவக்க நிலையில் கண்டறிந்தால், முழுமையான தீர்வு காண முடியும்.
பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள், பிறக்கும் போது மூளையில் ஏற்படும் கட்டிகள், பரம்பரை பாதிப்பு, பக்கவாதம், புற்றுநோய் கட்டிகள் ஆகியவை வலிப்புக்கான காரணங்களாகும்.
மேலும், விபத்து மற்றும் தலையில் ஏற்படும் காயங்கள், போதுமான துாக்கமின்மையும் பொதுவான காரணங்களாகும்.
பலருக்கு மருந்து எடுத்தவுடன் வலிப்பு குறையும். சிலருக்கு, மருந்து எடுத்துக்கொண்டாலும் அடிக்கடி ஏற்படும். இதுபோன்ற நிலையில், உரிய நிபுணர்களை அணுகுவதே சரி.
மூளையில் பாதிக்கப்பட்ட இடத்தை அறிந்து, துல்லியமான முறையில் ஆப்ரேஷன் செய்து சரி செய்ய முடியும். இதனால், பக்கவிளைவுகள் குறைந்து, வாழ்க்கை தரம் மேம்படும்.
வலிப்பு நோயுள்ள பெண்கள் பாதிப்பு குறித்து வெளிப்படையாக கூறி, திருமணம் செய்யலாம். சில விஷயங்களில் கவனமாக இருந்து, இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாம்; குழந்தையும் பெறலாம்.
அதேவேளையில், திருமணத்துக்கு முன் டாக்டரிடம் ஆலோசனை பெற்று, உரிய மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.