நகங்களை கடித்தால் பிரச்னையா? என்னென்ன வரும் என அறிவோமா?

டென்ஷன் வந்தாலேயே சிலர், நகங்களை கடிப்பது உண்டு. அப்படி கடிப்பதால் நகங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் வாய் வழியாக உடலுக்குள் நுழையும்.

குறிப்பாக பரோனிசியா எனப்படும் பாக்டீரியா தொற்று உடனே ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தொற்று படிப்படியாக உடல் முழுவது ஆக்கிரமித்து பின்னர் பெரிய நோய்களுக்கு வழிவகுக்குமாம்.

மேலும் சிலருக்கு நகம் கடிக்கும் போது சதைப்பகுதியும் சேர்ந்து கிழிகிறது. அதனால் கிருமி உடனே உடலுக்கு செல்லும்.

அதுமட்டுமில்லாமல் நகம் கடிப்பதால் அதிலுள்ள அழுக்களும் வயிற்றில் சேரும். இதனால் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனாலேயே சிலருக்கு அடிக்கடி வயிற்றுவலி, காய்ச்சல், உடல்வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

நகம் கடித்தால் பூஞ்சை தொற்று எளிதில் ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது. எனவே நகங்களை கடிக்காமல் அடிக்கடி வெட்டி விடுவது நல்லது.