காய்ச்சலின் போது அசைவம் சாப்பிடலாமா?

புரதச்சத்து அதிகம் தேவை என புரதம் அதிகமுள்ள உணவாக பலரும் தேடித் தேடி சாப்பிடுகின்றனர். குறிப்பாக, தினமும் முட்டை சாப்பிடுவோர் அதிகம்.

காய்ச்சல் இருக்கும் போது கூட, ஒருசிலர் புரதச்சத்து கிடைப்பதற்காக முட்டை சாப்பிடுவர்.

ஆனால், முட்டை சாப்பிடுவது காய்ச்சலை இன்னும் அதிகப்படுத்தி விடக்கூடும்.

காய்ச்சல் இருக்கும் நாட்களில், புழுங்கல் அரிசி நொய் கஞ்சி, ரசம், அரிசி சாதம் தவிர, வேறு எதுவும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இரண்டு, மூன்று நாட்களுக்கு இந்த பத்திய உணவு சாப்பிட்டால், செரிமானத்திற்கு எளிது; நோய் விரைவில் குணமாகும். தனியா விதையை வறுத்து துவையல் செய்து சாப்பிடலாம்.

காய்ச்சல் சரியானவுடன் உடனடியாக அசைவ உணவு சாப்பிடாமல், நான்கைந்து நாட்கள் கழித்து 'சூப்' குடிக்கலாம்.

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து குழம்பு சாப்பிடலாம். வறுத்த, பொரித்த வகைகளை தவிர்ப்பது நல்லது.