துாக்கம் பாதித்தால் என்ன நடக்கும்?
இது இரவு, பகல் என்று உடலுக்கு உணர்த்துவதற்கு, 'சர்கார்டியன் ரிதம்' என்ற கடிகார அமைப்பு நம் அனைவரின் உடலிலும் இருக்கிறது.
துாங்க வேண்டிய நேரத்தில் துாங்காமல், செயற்கை வெளிச்சத்தில் விழித்திருந்து வேலை செய்தால், இந்த கடிகார சுழற்சியில் மாறுபாடு ஏற்படும்.
மெலடோனின் ஹார்மோன் சுரப்பை பாதிக்கும். இதனால், மயக்கம், சிந்திப்பதில் பிரச்னை ஏற்படலாம்.
இதே சூழ்நிலையில் இருக்கும் பலர் நீண்ட நாட்களாக துாக்கமின்மையால் அவதிப்படுவர்.
இவர்களுக்கு, 'அடினோசின்' என்ற வேதிப்பொருள் உடலில் அதிக அளவில் உற்பத்தி ஆகும்.
இதனால், நினைவுத்திறன் இழப்பு, மனநிலையில் மாற்றம், இதய நாளங்கள் தொடர்பான கோளாறுகள், நச்சுகளை வெளியேற்றும் மூளையின் திறனில் குறைபாடு ஏற்படும்.