முடக்குவாதத்தை ஏற்படுத்தும் புரத உணவுகள்!
மூட்டு முடக்குவாதம் பெரும்பாலும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. இதற்கு, ஹார்மோன் கோளாறுகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் மூட்டு முடக்குவாதத்தில், 'கவுட்' என்ற ஒரு வகை, ஆண்களை அதிகம் பாதிக்கிறது என கூறப்படுகிறது.
புரதம் மட்டுமே உணவில் பிரதானமாக இருக்க வேண்டும் என்ற தவறான அபிப்ராயமும் இன்றைய இளம் வயதினரிடம் இருக்கிறது.
இதனால் ஏற்படும் மூட்டு முடக்குவாத பிரச்னை, ஆண்கள் மத்தியில் பொதுவாக உள்ளது. இதற்கு,'கவுட்' என்று பெயர் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
தேவைக்கு அதிகமாக சாப்பிடும் புரதம் சிறுநீரில் வெளியேறும் போது, ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகும்.
இது, மூட்டுகளில் படியும் பிரச்னை தான் கவுட். பெருவிரல், மூட்டுகள் என்று உடலின் கீழ் பகுதியில், வெப்பம் அதிகம் தாக்காத மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இப்படி பிரச்னை உள்ளவர்கள், இதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது, அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது .