கோடை வெப்பத்திலிருந்து சருமத்தை காக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாமா?
சருமம் வறட்சியானதா, எண்ணெய் தன்மை அதிகம் கொண்டதா என டாக்டரிடம் ஆலோசனை பெற்று சன் ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும்.
குளித்து விட்டு முகத்தில், முன் கழுத்து, பின் கழுத்து வெளிப்புற கைகளில் பூசிக்கொள்ளலாம்.
கிரீம் தடவிய 20 நிமிடம் கழித்து தான் வெளியே செல்ல வேண்டும்.
6 மணி நேரத்திற்கு பிறகு வெளியே இருக்கும் சூழ்நிலையில் மறுபடியும் பூசி கொள்ள வேண்டும்.
சன் கிரீமை முறையாக பயன்படுத்தினால் சருமத்திலுள்ள நீர் சத்து பாதுகாக்கப்படும். சூரிய கதிர்களால் ஏற்படும் அலர்ஜி, தோல் கருமை, சுருக்கம், சரும கோளாறுகளில் இருந்து பாதுகாக்கலாம்.
வெயில் மற்றும் குளிர்காலத்திலும் சன் ஸ்கிரீனை பயன்படுத்தலாம்.