அடிக்கடி முகத்திற்கு ப்ளீச் செய்வது சருமத்திற்கு நல்லதா?
முகத்தை அழகாகவும் மற்றும் பளபளப்பாகவும் வைக்க பொதுவாக பெண்கள் மற்றும் ஆண்கள் ஃபேஷியலுடன் ப்ளீச் செய்வதுண்டு.
காரணம் ப்ளீச் செய்யும்போது, முகத்தில் இருக்கும் நுண்ணிய ரோமங்கள் அனைத்தும் நிறம் மாறி பொன்னிறமாகும். இதனால் தான் சருமம் பளிச்சென்று ஆகிறது.
ப்ளீச்சிங் கெமிக்கல் என்பதால் அதிலுள்ள அமிலத்தன்மை சருமத்தின் இயற்கையான ஈரத்தன்மையை அகற்றிவிடும்.
குறிப்பாக லிக்விட் அம்மோனியம் மற்றும் ஹைட்ரஜன் ஃபராக்சைட் ஆகிய இரண்டு கெமிக்கல்கள் ப்ளீச் செய்ய பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
இவை சிலருக்கு அலர்ஜி உண்டாக்கி சருமத்தில் தடிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். சிலருக்கு கண் எரிச்சல் கூட ஏற்படும்.
அடிக்கடி ப்ளீச் செய்வதால் சருமம் தனது இயல்பை இழந்து சீக்கிரம் முதிர்ச்சி அடையக்கூடும். அதனால் முக்கியமாக தேவைப்படும் போது மட்டும் ப்ளீச் செய்யலாம்.
அதனால் சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள், எண்ணெய்ப்பசை அதிகமுள்ள சருமம் உள்ளவர்கள் ப்ளீச் செய்வதை தவிர்க்கலாம்.