குங்குமப்பூவில் உள்ள வைட்டமின் பி நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது. இது புற்றுநோய் போன்ற நோய்களால் உடலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது.

இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற அனைத்திலுமிருந்து குங்குமப்பூ உங்களை பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

குங்குமப்பூ நமது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது வயிற்று வலி மற்றும் புண்கள் போன்ற நோய்களை நீக்கி நமது உடலை நோயற்றதாக்குகிறது.

இது நினைவாற்றல் மற்றும் மூளை செயல்பாடுகளை மேம்படுத்த உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

குங்குமப்பூவில் பல்வேறு வேதியியல் கூறுகள் உள்ளன. இவற்றில் சில ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய்களுக்கு எதிராக போராடவும் உதவுகிறது.

குங்குமப்பூ தேநீர் செய்முறை:ஒரு கப் தண்ணீரை நான்கு குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பின்னர் ஒரு கோப்பையில் வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து கலக்கினால் சுவையான குங்குமப்பூ தேநீர் ரெடி.