பித்தப்பை கல் எதனால் உருவாகிறது?

உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு செரிக்க, கல்லீரல் சுரக்கும் திரவம் பைல் எனப்படும் .

இந்த பைல் பித்தப் பையில் சேகரித்து வைக்கப்பட்டு, தேவையான சமயத்தில் செரிமானத்திற்காக பயன்படுத்தப்படும்.

பித்த நீரில் அதிக அளவு நீரும், குறைந்த அளவு பைல் உப்பு, பிலிரூபின், கொலஸ்ட்ரால் உள்ளன.

பைலில் உள்ள கொழுப்பு அல்லது பிலிரூபின், உணவு பழக்கம் அல்லது பிற காரணங்களால் கல்லாக மாறும்.

இதனை தவிர்க்க பொரித்த உணவுகள், அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்து நார்ச்சத்துள்ள உணவுகளை சேர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி , சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மதுகுடிப்பதை தவிர்த்தல் பலன் தரும்.

பித்தப் பை கல் அடைத்து மஞ்சள் காமாலை ஏற்பட்டால், அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர்.