மண்பானை தண்ணீர் மகத்துவம் அறிவோமா...

குளிர்ச்சியையும், தண்ணீரின் சத்துகளையும் பாதுகாக்கும் தன்மை, மண்பானைக்கு உண்டு.

அதில், இருக்கும் நுண் துளைகள் வழியாக காற்று, உள்ளே சென்று வெளியில வருவதால், எப்போதும் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்.

இந்த தண்ணீரை குடித்தால், வெயில் காலத்தில் உடலில் சேரும் இயற்கையான உஷ்ணம் தணியும்.

கிருமிகளோடு, தண்ணீர் கலந்தால், கழிவுநீர் ஆகிவிடும். அதுபோலவே, தண்ணீர் எந்த பாத்திரத்தில் உள்ளதோ, அதன் தன்மையை உள்வாங்கி கொள்கிறது.

சில ஊற்று நீர், ஆற்று நீர் ஆகியவை சுவையாக இருக்க காரணம், அந்த பகுதியில் உள்ள மண்ணின் தன்மையே.

மண்ணில் இருக்கும், 'மைக்ரோ நியூட்ரியன்ட்' தண்ணீரில் கலப்பதால், அச்சுவைக்கு காரணமாகிறது. தரமான மண் எடுத்து அதில், செய்யப்படும் மண்பானைகள் மூலம் அருந்தும் தண்ணீர், ஆரோக்கியத்தை உயர்த்தும்.

மண்பானையில், நன்னாரி, வெட்டி வேர் போட்டு தண்ணீர் குடியுங்கள். உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, சிறுநீர் நன்றாக பிரியும்.

மண்பானையில் மட்டுமே, நன்னாரி, வெட்டிவேரின் முழு பலன்களும் கிடைக்கும். பானையின் நுண் துகள்கள் வழியாக ஆக்சிஜன், போகும் போது, உள் இருக்கும் நன்னாரி, வெட்டிவேருடன், 'பயாலஜிக்கல் ரியாக்ஷன்' நடக்கும். இது உடம்புக்கு மிகவும் நல்லது.  

வெயில் நேரத்தில், அலுமினிய பாத்திரத்தில் வைத்து நீர் அருந்தும்போது, வயிறு ஒவ்வாமை வரும். கட்டடத்தின் வெப்பம் இறங்கி, சில்வர் பாத்திரத்தில் வைத்து இருக்கும் குடிநீரும் பருக சப்பென்று இருக்கும்.