கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து தெரிந்து கொள்வோமா?

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு, 99 சதவீதம் ஹெச்.பி.வி, எனும் வைரஸ் முதன்மையான காரணமாகவுள்ளது.

இந்த வைரஸ், உடல் உறவு வாயிலாக பாட்னர்களுக்கு பரவுகிறது. பெண்கள் மக்கள் தொகையில், 80 முதல் 90 சதவீதம் பேருக்கு தானாகவோ, உடல் உறவு வாயிலாகவோ வருகிறது.

90 சதவீத பெண்களின் உடலில் இருந்து, நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக தானாக வெளியேறிவிடும். 10 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவால், கர்ப்பப்பை வாய் பகுதியிலேயே தங்கிவிடுகிறது.

இந்த வைரஸ் 10-15 ஆண்டுகள் கழித்து நிதானமாக புற்றுநோய் செல்களாக மாறிவிடும்.

ஹெச்.பி.வி.பரிசோதனை செய்தால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதா என்பதை அறிந்து, வராமல் தடுக்க முடியும்.

தடுப்பூசி உள்ளதால், 99 சதவீதம் வராமல் தடுக்க முடியும். 9 முதல் 15 வயதுக்குள் உள்ள இருபாலர் குழந்தைகளுக்கு செலுத்திக்கொள்வது சிறந்த பலனை தரும்.

15 வயதுக்கு மேலும் செலுத்த முடியும், ஆனால், வயது அதிகரிக்கும் போது அதன் தன்மை குறையலாம்.

உலக சுகாதார மைய அறிவுறுத்தலின் படி, 45 வயது வரை பெண்களும், 26 வயது வரை ஆண்களும் இத்தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.