சுரைக்காய்க்கு உப்பு இல்லை... ஏன் தெரியுமா!!
சுரைக்காய் சாப்பிட்டால் உடலிலுள்ள கெட்ட உப்புக்களை சிறுநீரகம் வழியாக வெளியே கொண்டுவந்துவிடும் என கூறப்படுகிறது.
சுரைக்காய் உண்பதால் உடலில் கெட்ட உப்புக்கள் இருக்காது என்பததைத்தான் சுரைக்காய்க்கு உப்பு இல்லை என முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இதில் விட்டமின் பி, சி, ஏ, கே, மற்றும் இ, இரும்புச்சத்து, மெக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் நிரம்பியுள்ளன.
சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் ,யூரினரி இன்ஃபெக்ஷன் எனப்படும் சிறுநீரக கிருமித் தொற்று உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிடலாம். நல்ல நிவாரணம் தரும்.
மேலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள், சிறுநீர் வழியாக புரோட்டின் வெளியேறுபவர்கள், என சிறு நீரக சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் சுரைக்காய் ஒரு அருமையான மருந்து.
இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும். குறிப்பாக, ஹைப்பர் டென்ஷன் பிரச்னைக்கு நல்ல தீர்வை கொடுக்கும்.
நிறைந்த நார்ச்சத்து, நீர்ச்சத்து ஆகியவை இருப்பதால் இது உணவை எளிமையாக செரிமாணம் செய்ய உதவும். மலச்சிக்கலையும் போக்கும்.
அதனால் வாரம் இரு முறை சுரைக்காயை வேக வைத்தோ, அல்லது கூட்டு, சாம்பார், சூப் என ஏதொ ஒரு முறையில் சாப்பிடலாம்.