காகித கப்களில் டீ, காபி குடிப்பவரா நீங்க? கொஞ்சம் யோசிக்கலாமே !
பிளாஸ்டிக் கப்களுடன் ஒப்பிடும்போது காகிதக் கப்களை ஆரோக்கியமானதாகக் கருதலாம். ஆனால் இந்த கப்களின் உட்புறமும் பிளாஸ்டிக் பூசப்பட்டிருப்பதால் அவை ஆரோக்கியமற்றவை.
சூடான திரவத்தை இந்த பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதக் கப்களில் ஊற்றிப் பருகும் போது, ஆயிரக்கணக்கான நச்சு ரசாயனங்களை வெளியிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரு நபர் ஒரு காகிதக் கோப்பையில் மூன்று கப் டீ அல்லது காபி குடித்தால், அவர்கள் 75,000 சிறிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வார்கள்.
இப்படிப்பட்ட காகிதக்கப்களில் தினமும் சூடான பானங்களைக் குடிக்கும்போது, குடல் பிரச்னைகள், புற்றுநோய், நரம்பியல் கோளாறு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், இனப்பெருக்க பிரச்னைகளுக்கு வாய்ப்புள்ளன.
காகிதக் கப்பில் குளிர்ந்த பானங்களைப் பருகும் போது, அவை ரசாயனங்களை வெளியிடுவதில்லை. எனவே, குளிர்ந்த பானங்களைப் பருகுவதற்கு இது பாதுகாப்பானது.
ஆனால் ஒருபோதும் அறை வெப்பநிலை கொண்ட பானங்களைக் கூட இதில் ஊற்றி பருகாதீர்கள்.
இதுபோன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் காகிதக் கப்களை தவிர்த்து, பழைய முறைப்படி பீங்கான் அல்லது கண்ணாடி கோப்பைகளில் சூடான பானங்களை அருந்தலாம்.
குறிப்பாகச் சுத்தமாக அவற்றையும் பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கும், உடலுக்கும் சிறந்ததாகும்.