இன்று உலக இதய தினம்.. இதயத்தை பாதுகாக்க சில டிப்ஸ்!!
இதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், செப்., 29 அன்று உலக இதய கூட்டமைப்பு சார்பில் உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது.
இதய பிரச்னை வராமல் தடுக்க முதலில் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் நீரிழிவு பாதிப்பையும் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
அளவான சாப்பாடு, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நொறுக்குத் தீனி, கொழுப்பு நிறைந்த உணவு பொருட்கள், ரெட் மீட் வகைகளை தவிர்க்கலாம்.
உடலில் உள்ள நீர் சத்து குறையாமல் இருக்க, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
குறிப்பாக இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் கண்டிப்பாக புகை, மதுவை தவிர்ப்பது நல்லது.
சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உடல் பருமன் இதய பாதிப்பை அதிகப்படுத்தும் என்பதால் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வாரத்தில், 4 முதல், 5 நாட்கள், 30 நிமிடங்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
தினமும் 7 அல்லது 8 மணி நேரம் துாங்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.