கொழுப்பு நீக்கப்பட்ட பால் உடலுக்கு ஏற்றதா?

பாலில் உள்ள அதீத கொழுப்புச்சத்து உடற்பருமனை ஏற்படுத்தும் என்பதால், தற்போது பலரும் பாக்கெட்களில் விற்கப்படும் ஸ்கிம்டு மில்க் வாங்கிப் பருகுகின்றனர்.

ஸ்கிம்டு பாலில் உள்ள கொழுப்பு முழுவதுமாக நீக்கப்பட்டு, 0.1 சதவீதம் மட்டுமே இருக்கும். பாலிலுள்ள கால்சியம், வைட்டமின் பி-2, பி-12, பாஸ்பரஸ் உள்ளிட்டவை மட்டும் உடலில் சேரும்.

பொதுவாக உடற்பருமனைக் குறைக்க ஜிம் பயிற்சி செய்வோர் ஸ்கிம்டு மில்க் சாப்பிடுவர். இது ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும்.

எலும்புகள் வலுப்பெற உதவும். உடல் மெலிந்தவர்கள் தசைகளுக்கு புரதம் கிடைக்கவும் தசைகளை வலுப்படுத்தவும் ஸ்கிம்டு மில்க் சாப்பிடலாம்.

இன்று ஸ்கிம்டு மில்க் சந்தை பெரிதாகி வருவதை அடுத்து, சூப்பர் மார்கெட்களில் இதன் வியாபாரம் களைகட்டி வருகிறது; பாக்கெட்கள் விலையும் அதிகரித்து வருகிறது.

ஆனால் இவற்றுள் தரமானதை வாங்குவது சிறந்தது. பலரும் யூடியூபில் ஸ்கிம்டு மில்க் ரெசிபி வீடியோக்கள் பதிவிடுவதால், உங்கள் வீட்டிலேயே எளிதாக தயாரித்துக் குடிக்கலாம்.