கீழே விழுவதால் ஏற்படும் வீக்கதிற்கு முதல் உதவி என்னென்ன?
தவறி கீழே விழுவதால் கை, காலில் வீக்கம் ஏற்பட்டவுடன் முதலில் ஓய்வு எடுக்க வேண்டும்.
பின் வீக்கம் உள்ள இடத்தில் ஐஸ்கட்டிகள் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். மேலும் வீக்கத்தை குறைக்க பேண்ட்டேஜ் சுற்றலாம்.
காயமடைந்த பகுதியை தலையணை பயன்படுத்தி சற்று உயரமாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். இந்த முறைகள் உடனடியாக செய்ய வேண்டியது.
இதில் தசைநார் பாதிப்பா, எலும்பு முறிவா என்பதை எக்ஸ்ரே பரிசோதனை மூலம் தெளிவுப்படுத்தி கொள்ள வேண்டும்.
எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தால் சரியான நிலையில் வைத்து கட்டு போட்டால் சரியாகிவிடும்.
தசைநார் பாதித்து இருந்தால் அதற்கு உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் வீக்கம் குறைந்து குணமடைய முடியும்.