'ஜங்க் புட்' ஏன் ஆபத்தானவை?

பிரஞ்சு பிரை, பீட்சா, பர்கர், ஹாட் டாக், மில்க் பிரெட், பிஸ்கட், இன்ஸ்டன்ட் நுாடுல்ஸ், சிப்ஸ், குளிர்பானங்கள் போன்ற பாக்கெட்டுகளில் விற்கும் ஜங்க் உணவுகளில், நார்ச்சத்து, விட்டமின்கள், தாதுக்கள் இருக்காது.

நார்ச்சத்து இல்லாமல், அதிக கொழுப்பு இருப்பதால் செரிமானம் ஆவதற்கு சிரமம்.

இதனால், மெட்டபாலிசம் இயல்பை விட அதிகமாக செயல்பட வேண்டிருப்பதால், செரிமானம் தவிர வேறு வேலைகளை முழுமையாக செய்ய முடியாது.

இதனால் மூளை உட்பட உடல் உள் உறுப்புகளுக்கு குறைந்த அளவு ஆக்சிஜனே கிடைக்கும். மூளையின் செயல்பாடுகள் சீராக இருக்காது.

ஜங்க் உணவுகளில் உள்ள அதிகபடியான அமிலம்பசியின்மை, வயிற்றுப்புண், வயிற்றில் ரத்தக்கசிவு, ஏன் வயிற்றில் கேன்சர் கூட உண்டாகலாம்.

நரம்பு மண்டலத்தை மிக மோசமாக பாதிக்கிறது. நம் உடலில் வலி ஏற்பட்டால் நரம்புகள் தான் அவற்றை வெளிப்படுத்தும். அதிக ஜங்க் புட் சாப்பிடும்போது, இந்த திறனை நரம்புகள் இழக்கின்றன.

ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் டிரான்ஸ்பேட்ஸ், உப்பு, நீண்ட காலத்திற்கு கெடாமல் இருக்க வேதிப்பொருட்கள் ஜங்க் புட்டில் சேர்க்கப்பட்டிருக்கும். இதை தவிர்ப்பது மிகவும் நல்லது.