கோடையில் சாப்பிட குழந்தைகள் அடம் பிடிக்கிறார்களா?- இத ட்ரை பண்ணுங்க..!

கோடைக்காலத்தில் தர்பூசணி, ஆரஞ்சு மற்றும் ஆப்ரிகாட் போன்ற நீர் நிறைந்த பழங்கள் உங்கள் குழந்தையின் நீரேற்றத்தை அதிகரிக்கும். இந்த பழங்களை சிறிய துண்டுகளாக பரிமாறலாம்.

உங்கள் பிள்ளைக்கு பழச்சாறுகளை குடிக்க வைப்பது சவாலாக இருந்தால், புதிய பழச்சாறுகள் அல்லது அவர்களுக்குப் பிடித்த பழ மில்க் ஷேக்குகளை ஒரு சிறிய கிளாஸில் குச்சி ஐஸ் போன்று செய்து கொடுக்கலாம்.

உங்கள் பிள்ளைகளுக்கு தேவையான அளவு தண்ணீரைக் குடிக்கத் தயங்கினால், பப்பாளி மற்றும் அன்னாசி லஸ்ஸியை செய்து கொடுக்கலாம்.

வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆலிவ் மற்றும் செர்ரி தக்காளி போன்ற நீர் மஞ்சள் மற்றும் பச்சை காய்கறிகள் கொண்ட சாலட் ஒரு சரியான கோடைகால சுவையான சிற்றூண்டியாக இருக்கும்.

புதினா அல்லது கெமோமில்(சீமை சாமந்தி) போன்ற மூலிகை கலந்த டீகளை தயாரித்து குழந்தைகளுக்கு வழங்குங்கள். இதில், கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம்.

துண்டுகளாக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரிகள், வெள்ளரிகள் அல்லது எலுமிச்சைப் பழங்களை உங்கள் பிள்ளையின் கிளாஸ் தண்ணீரில் சேர்க்கவும். அவை ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளன. மேலும் அவை குழந்தைகளையும் ஈர்க்கும்.