பருவநிலை மாற்றத்தால் மக்களிடையே தோல் புற்றுநோய் அதிகரிக்கும்.
உலக அளவில் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தோல் புற்றுநோய் வரும் காலங்களில் பருவநிலை மாற்றத்தால் அதிகமானவர்களுக்கு ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
தோல் புற்றுநோயில் மெலனோமா வகை தான் வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வட மற்றும் தென் ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது.
பிரிட்டனை சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எட்டுவிதமான மெலனோமா புற்றுநோய் இருப்பதாக கூறுகிறது.
இந்தத் தோல் புற்றுநோய் பெரும்பாலும் 30 முதல் 50 வயதில் இருக்கும் இருபாலரையும் பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உலக சுகாதார அமைச்சகத்தின் புற்றுநோய் கண்காணிப்பகம் 2020 முதல் 2040க்குள் மக்கள் மத்தியில் தோல் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் என கணித்துள்ளது.
சூரிய புற ஊதா கதிர்வீச்சில் அதிகப்படியாக நாம் ஆளாவது ஆகியவை இனி மிகப்பெரிய ஆபத்து காரணியாக இருக்கும்.
பூமத்திய ரேகைக்கு அருகில் அல்லது சரியாக பூமத்தியரேகைக்கு தெற்கே வாழ்ந்தால் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.